தங்கம் விலையானது இரண்டாவது வாரமாக தொடர்ந்து சரிவில் முடிவடைந்துள்ளது.. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் கிட்டதட்ட 1734 டாலர்களை தொட்ட நிலையில், முடிவில் 1738 டாலர்கள் என்ற லெவலில் முடிவடைந்தது.
இது குறைந்த விலையில் கிடைத்த நிலையில், வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
ஆக வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அடடே இது நல்ல விஷயமாச்சே.. தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?
முக்கிய காரணிகள்
வரும் வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு, பொருளாதார தரவுகள், ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிக்கைகள், பணவீக்க அழுத்தம், வட்டி விகிதம் உள்ளிட்ட பல காரணிகளும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எதிர்பார்ப்பினை போலவே கடந்த வாரத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் கட்டாயம் வட்டி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது.
டாலரின் மதிப்பு
டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு 109.27 டாலர் என்ற உச்சத்தினை எட்டியுள்ளது. எனினும் கடந்த வாரத்தில் அமெரிக்காவின் இரண்டாவது காலாண்டு ஜிடிபி விகிதமானது -0.6% சரிவினைக் கண்டது. இது முன்னதாக -0.9% ஆக சரியலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவும் வெளியானது. இதுவும் கடந்த மாதத்தினை காட்டிலும் உச்சம் தொட்டுள்ளது.
வட்டி அதிகரிக்கலாம்
ஆக பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை கட்டாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 50 – 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தங்கம் அவுட்லுக்
தங்கம் விலையானது வரவிருக்கும் நாட்களில் 1770 டாலர்களை தொடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. எனினும் அதற்கு முன்பாக 1720 – 1710 டாலர்கள் என்ற லெவலை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 52000 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே சரிவினைக் கண்டால் 10 கிராமுக்கு 50,700 – 50,500 ரூபாய் எண்ற லெவலை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய காரணிகள்
மீடியம் டெர்மில் தங்கத்தின் விலையில் அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்த தரவானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஐரோப்பாவின் ஈடிபி கூட்டம் உள்ளிட்ட பல தரவுகளும் வெளியாகவுள்ளன. ஆக இதுவும் வரும் வாரத்தில் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.
Us job data to india’s GDP: 5 Important Factors to Consider in Determining Gold Prices
Us job data to india’s GDP: 5 Important Factors to Consider in Determining Gold Prices/தங்கம் விலை வரும் வாரத்தில் எப்படி இருக்கும் தெரியுமா.. இதே கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!