தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி கொலை செய்து தாயின் காலடியில் போட்ட மகன்

திருப்பதியில், தாயை கிண்டல் செய்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள அலிபுரம் பகுதியைச் சேர்ந்த சீனு, நேற்று சாலையில் நடந்து சென்ற பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் தனது மகனிடம் கூறியதையடுத்து, தாயுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர், சீனுவை துரத்திச் சென்று தாக்கியதுடன் அங்கிருந்த சுவற்றில் தலையை மோதிக் கொலை செய்துள்ளார். பின்னர், 30 அடி தூரத்திற்கு சீனுவின் உடலை தரதரவென இழுத்து வந்து அந்த இளைஞர், தாயின் காலடியில் போட்டுள்ளார்.

பின்னர் அந்த இளைஞர் தாயுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த விசாகப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி, கொலைக்கான முழு காரணம் குறித்தும், கொலை செய்த இளைஞரையும் அவரது தாயையும் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.