விதிமுறைகளைமீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது. இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இந்த இரட்டை கோபுரத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோபுரங்களின் கட்டுமானத்தின்போது, உத்தரபிரதேச அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் விதிமுறை மீறப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது .
தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன.
தோட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமாக இந்த இரண்டு கோபுரங்களும் எழுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டது. 2012 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன்பாக, நொய்டா நிர்வாகம், 2009ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில் இந்த கோபுரங்களை இடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரட்டை கோபுரத்தை இடிக்கும் செலவையும் சூப்பர்டெக் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இங்கு வீடு வாங்கியவர்களுக்கு 14% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதே ஆண்டின் மே மாதத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடியது சூப்பர்டெக் கட்டுமான நிறுவனம்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், விதிகள் மீறப்பட்டுள்ளன என்றும் உறுதி செய்தது. இதன் விளைவாகவே, இன்று இந்த இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.