விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது . இதன் விளைவாக இந்த கட்டிடத்திற்கு அருகே உள்ள சில கட்டிடங்களில் ஜன்னல் மற்றும் கண்ணாடிகள் அதிர்வினால் சேதமடைந்ததாக கூறபடுகிறது.
இந்த கட்டிடத்திற்கு அருகே உள்ள 10மீட்டர் சுவரும் கண்ணாடி ஜன்னல்களும் இதனால் சேதமடைந்தாக இந்த கட்டிட இடிப்பு கண்காணிப்பாளர் டிசிபி ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதை கண்காணிக்கும் பொறுப்பு நிர்வாகிகள் ஸெஇதியுஆலர்கலிடம் தெரிவிக்கையில் “ இந்த கட்டிட இடிபாட்டால் சுமார் 55,000 டன் கட்டிட கழிவுகள் குவிந்துள்ளது என்றும் அதனை சுத்தம் செய்ய மூன்று மாத காலம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இரட்டை கோபுரம் 9வினாடிகளில் சுமார் 3,700 கிலோ வெடி மருந்துகளை கொண்டு தகர்க்க பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரட்டை கோபுர இடிப்பு சம்பவம் பலரை அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கிறது.