பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. உடனே வாழ்த்திய பிரதமர் மோடி! என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

டெல்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை சுவைத்து இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தாலும் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றைதான்.

அதுதான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆசிய கோப்பை

கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ரிஜ்வான் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

இந்தியா பவுலர்கள் அசத்தல்

இந்தியா பவுலர்கள் அசத்தல்

முஹம்மது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று குறையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பலமாக திகழ்ந்தனர் புவனேஷ்வர் குமாரும் ஹர்திக் பாண்டியாவும். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுக்க, பார்ட் டைம் பவுலர் என்று கூறப்பட்ட ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியாவுக்கு அதிர்ச்சி

இந்தியாவுக்கு அதிர்ச்சி

பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய இந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகவிட, கேப்டன் ரோகித் ஷர்மாவும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மட்டும் நிதானமாக ஆடி 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ஜடேஜா - பாண்டியா

ஜடேஜா – பாண்டியா

அடுத்து களமிறங்கிய ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை நோக்கி நகர்ந்தனர்.

கடைசி ஓவரில் வெற்றி

கடைசி ஓவரில் வெற்றி

கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா அவுட்டாக நவாஸ் ஓவரின் 4 வது பந்தில் பவுண்டரில் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இந்திய ரசிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆல் ரவுட் ஆட்டத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது. வெற்றிபெற்றதற்காக வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.