சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இன்று(28ஆம் திகதி) யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.