தேச ஒற்றுமைக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடை பயணத்தை முதலமைச்சர்
துவக்கி வைக்க உள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நிலையில், அது தொடர்பாக சென்னையில் உள்ள
தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜூ லிலோதியா, எம்.பி ஜெயக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர்கள், சமூக நீதிக்கு இன்று பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்திய அரசியல் சட்டத்தை பாதுக்காக்க ராகுல் காந்தி மக்கள் இடம் சென்று அதை எடுத்து சொல்ல இருக்கிறார். நாங்கள் இந்த அரசை பாதுகாக்க விரும்புகிறோம் அது எங்கள் கடமை என தெரிவித்தனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கும் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.