மிட் கேப் நிறுவனமான பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 7170.60 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை கொண்ட ஒரு நிறுவனமாகும்.
புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும்.
இதில் கவனிக்கதக்க விஷயங்களில் ஒன்று, அதானி சோலார், இந்தியன் ஆயில், ஹெனிகென், தீபக் ஃபெர்டிலைசர்ஸ், எஸ் ஏபி மில்லர், பஜாஜ் ஹுந்துஸ்தான் யுபி குழுமம், பயோகார்ன், ப்ராக்டர் & கேம்பிள், ரான்பாக்ஸி, லூபின், பிஏஎஸ்எஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் பிரஜ்- ன் குறிப்பிடத்தகக் வாடிக்கையாளர்களில் அடங்கும்.
3 மாதத்தில் 16% வரை லாபம் கிடைக்கலாம் .. இந்த மினி ரத்னா பங்கு உங்ககிட்ட இருக்கா?
கோடீஸ்வரர் ஆக்கிய பங்கு
இது தற்போது கடனில்லா ஒரு நிறுவனமாகும். இது அதன் முதலீட்டாளார்களை கோடீஸ்வரர் ஆக்கிய ஒரு நிறுவனமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலையானது 389.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் முடிவு விலையான 3.59% அதிகரித்து முடிவடைந்திருந்தது. கடந்த அமர்வில் இப்பங்கின் விலை 376.35 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தகக்து.
பங்கு வரலாறு
இப்பங்கின் விலையானது ஜனவரி 1, 1999 அன்று 0.77 ரூபாயாக இருந்தது. இது 50,529.87% லாபத்தினை கொடுத்துள்ளது. இதில் 23 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால்., இன்று அதன் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கு மேல். இப்பங்கின் விலையானது செப்டம்பர் 1, 2017ல் 67.50 ரூபாயாக இருந்தது. இதன் தற்போதைய லெவலுடன் பார்க்கும்போது 477.56% ஏற்றம் கண்டுள்ளது.
ஒரு வருடத்தில் என்ன நிலவரம்??
இப்பங்கின் விலையானது 12 மாதங்களில் 20.14% ஏற்றம் கண்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 15.44% ஏற்றம் கண்டுள்ளது. இந்த என்எஸ்இ பங்கின் 52 வார உச்ச விலையானது 448 ரூபாயினை எட்டியுள்ளது. இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 289.05 ரூபாயாகும். இதன் தற்போதைய விலை 389.35 என்ற லெவலில் காணப்படுகின்றது.
டெக்னிக்கல் நிலவரம்?
இப்பங்கின் விலையானது டெக்னிக்கலாக 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்-க்கு மேலாகவே காணப்படுகிறது. ஆக இப்பங்கின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காலாண்டு முடிவுகள்
இதன் நிகர விற்பனையானது முதல் காலாண்டில் 729.90 கோடி ரூபாயாகும். இதே இது கடந்த ஆண்டில் 386.30 கோடி ரூபாயாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 88.9% அதிகரித்துள்ளது. இதே செலவினங்கள் 674.10 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 355.70 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதே இதன் எபிட்டா விகிதம் 55.80 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 82.4% அதிகரித்துள்ள்சது. இதே எபிடா மார்ஜின் விகிதம் 7.64% ஆக சரிவினைக் கண்டுள்ளது.
வாங்கலாமா?
Praj Industries பங்கினை வாங்கி வைக்கலாம் என்றும், அதன் இலக்கு விலையினை 507 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதன் செயல்பாடு உள்நாட்டில் வலுவானதாக காணப்படுகின்றது. சர்வதேச அளவிலும் வலுவான இருப்பினை கொண்டுள்ளது. இது தவிர தொழில் நுட்பம் என அனைத்து அம்சங்களையும் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது. இதற்கிடையில் தான் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Rs.1 to Rs.389: This debt free mutibagger stock turns multi crore in 23 years: do you have this stock?
Rs.1 to Rs.389: This debt free mutibagger stock turns multi crore in 23 years: do you have this stock?/ரூ.1 டூ 389.. கோடிகளில் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..!