வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வை கூர்மை அடைய… இந்த விதையால் இவ்ளோ நன்மையா?

Sunflower seeds improves eye power Siddha health tips in Tamil: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் அல்லது பழங்கள் மூலமே நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதேநேரம், சில உணவுப்பொருட்கள் அல்லது பழங்களை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளாமலோ அல்லது இதுவரை தவிர்த்தோ வந்திருப்போம். ஆனால் அவற்றிலும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை நம் வழக்கமான உணவாக மாற்றி, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அத்தகைய பொருட்களையும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளையும் இப்போது பார்ப்போம்.

கண் பார்வை அதிகரிக்க சூரியகாந்தி விதைகளை உண்ணலாம். குறிப்பாக ஐந்து முதல் பதினைந்து வயது வரையுள்ள வளரும் குழந்தைகள் தினமும் பத்து அல்லது பதினைந்து சூரியகாந்தி விதைகளை உரித்து தின்பதால் கண் பார்வை கூர்மையாகும்.

இதையும் படியுங்கள்: இஞ்சி- பூண்டு பேஸ்ட்: டெய்லி அரைக்க வேண்டாம்; இப்படி ஸ்டோர் பண்ணுங்க!

தினமும் இரண்டு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன், இதயத்திற்கும் வலுவூட்டுகிறது.

காய்ச்சற்கட்டி (Spleen) என்னும் நோய் மிகவும் கொடுமையானது. இதற்கு பப்பாளிப் பழத்தையும், சப்பாத்திக் கள்ளியின் பழத்தையும் வேளை மாற்றித் தந்து வந்தால் விரைவில் குணம் காணலாம்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் குறையும்.

நெல்லிக்கனியின் சாற்றோடு பசுவின் நெய் ஒரு கரண்டியும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையும், மூளை தெளிவும், நரம்புகளுக்கு வன்மையும் உண்டாகும்.

தகவல் உதவி : மருத்துவர் முத்துக்குமார், சித்த மருத்துவ சிறப்பு நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்

தொடர்பு எண்: 9344186480

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.