147 ரன்களுக்கு சுருண்டது பாக்.,| Dinamalar

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி கடும் நெருக்கடி அளித்தனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும், அஸ்வினுக்கு பதிலாக ஆவேஷ் கானும் சேர்க்கப்பட்டனர்.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 147 ரன் மட்டுமே எடுத்தது.
டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அனைத்து 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.