183 கி.மீ. வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரயில்… துளியும் சிந்தாத தண்ணீரின் வைரல் வீடியோ!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு கொண்டாட்டங்களையும், முன்னெடுப்புகளையும் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் முக்கியமான 75 நகரங்களை ஒன்றிணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற ரயில் சேவையை தொடங்க அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த வந்தே பாரத் ரயில் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வந்தே பாரத் ரயில்கள் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தான். மேலும் வந்தே பாரத் ரயில் ஒரு சொகுசு ரயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடைய 180 டிகிரி சுழலும் சேர்கள் கொண்ட சிறப்பு அம்சங்கள் பொருந்திய ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களின் வேக சோதனையைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 2022 அன்று, ரயில்கள் வேகப் பரிசோதனைக்காக உருவாக்கப்பட்ட சென்னையின் இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) இருந்து சண்டிகருக்குச் சென்றன. மூன்றாவது வந்தே பாரத் ரயில் டெல்லி மற்றும் சண்டிகர் இடையே இயக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கோட்டா-நாக்டா பிரிவில் ரயிலின் வேக சோதனை வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் ரயிலின் வேகமானி மணிக்கு 180 கிமீ வேகத்தை எளிதில் எட்டுவதைக் காண முடிகிறது. இந்த வேக சோதனைகளின் தொடக்கத்துடன், இந்திய ரயில்வே நாடு முழுவதும் 75 வந்தே பர்தா ரயில்களை இயக்கும் இலக்கை நோக்கி முன்னேறியுள்ளது.

 

அதேபோல்  மற்றொரு வீடியோவை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் கிளாஸ் ஒன்று வேகமாணிக்கு ஆப் உடன் வைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 183 கி.மீ. வேகத்தில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் அந்த கிளாஸில் இருந்த தண்ணீர் துளி கூட கீழே சிந்தாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.