"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" – பிரதமர் மோடி

புஜ்: வரும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தனது சொந்த மாநிலமான கட்ச் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2001 வாக்கில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை அர்பணித்துள்ளார் அவர்.

அந்த மோசமான பூகம்பம் ஏற்பட்ட போது தான் டெல்லியில் இருந்ததாகவும். மறுநாளே குஜராத் திரும்பியதாகவும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். நாட்டிற்கே முன்னோடியாக பேரிடர் மேலாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்தியது குஜராத் மாநிலம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

“2001-ல் ஏற்பட்ட மோசமான பூகம்பத்திற்கு பிறகு இந்த மாவட்டத்தை நான் வளர்ச்சி பெற செய்வேன் என உறுதி அளித்தேன். 2022-ல் அதன் வளர்ச்சியை நாம் பார்த்து வருகிறோம். அதே போல வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவேன் என நான் இன்று உறுதியளிக்கிறேன். அது நிச்சயம் நடக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் கட்ச் பகுதியில் 45 புதிய கல்லூரிகள், 1000 புதிய பள்ளிகள், 250 மருத்துவமனைகள் மற்றும் 1000 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.