5வது ஆண்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்… திமுக தலைவரும், நெடிய அரசியலும்!

முதல்வர்

அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இன்றைய தினம் 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 14 வயதில் பள்ளி மாணவராக அரசியல் ஆழம் பார்த்திட களமிறங்கிய ஸ்டாலின், இன்று தமிழகத்தின் முதல்வர் என்ற மாபெரும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். கோபாலபுரம் இளைஞர் திமுகவில் தொடங்கி

என்ற உயரிய நிலையை அடையும் வரை ஸ்டாலினின் அரசியல் பயணம் மிகவும் நீண்டது. இவர் செய்த பணிகள், வகித்த பதவிகள், சந்தித்த சிரமங்கள் ஏராளம். 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று அறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் விரைவில் 73ஆம் ஆண்டை தொடப் போகிறது.

திமுகவின் தொடக்கக் காலங்களில் அறிஞர் அண்ணாவின் பேச்சும், முத்தமிழர் கலைஞர் கருணாநிதியின் எழுத்தும் போர்வாள் போன்று அளப்பறிய பங்காற்றின. தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் என பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து சமூக நீதிக்கான பயணத்தை சிறப்பான முறையில் செதுக்கினர். 1969ல் அண்ணா மறைந்த போது அடுத்த திமுக தலைவர் யார்? தமிழகத்தின் முதல்வர் யார்? என்பதில் கருணாநிதிக்கும், நெடுஞ்செழியனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. அப்போது தந்தை பெரியாரே முன்வந்து கருணாநிதியை முன்னிலைப்படுத்தினார். பின்னர் ஆட்சி சிம்மாசனத்தில் அமருவதற்கு

தேர்வு செய்யப்பட கட்சியும் அவர் வசம் வந்தது.

அதே ஆண்டு ஜூன் மாதம் திமுக தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு 2018 தான் மறையும் வரை 49 ஆண்டுகள் கட்சி தலைமை பொறுப்பை வகித்தார். இதற்கிடையில் ஸ்டாலினின் செயல்பாடுகள் பல்வேறு விதங்களில் மெருகேற்றப்பட்டும் தலைமை பொறுப்பு வழங்கப்படவில்லை. மிசா காலத்தில் கைது, சித்ரவதை என எண்ணிலா துயரங்களை அனுபவித்தார். அதன்பிறகு இளைஞரணி தலைவர், எம்.எல்.ஏ, சென்னை மாநகர மேயர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர், பொருளாளர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். கட்சியிலும், சமூகப் பணியிலும் ஏராளமான பாடங்களை கற்றுக் கொண்டார்.

வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கும் நிலை உருவான போது தான், ஸ்டாலினுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது. 2017 செயல் தலைவராக பதவியேற்றார். அடுத்த ஓராண்டில் கருணாநிதி காலமானார். ஏற்கனவே செயல் தலைவர் என்ற பதவியின் மூலம் திமுக தலைமை பொறுப்பிற்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது. இதனால் கருணாநிதி போன்று ஸ்டாலினுடன் போட்டி போட யாரும் முன்வரவில்லை. 2018ல் கட்சியினர் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் திமுக வெற்றி வாகை சூட முக்கிய காரணமாக இருந்தார்.

அடித்துக்கொள்ளும் அதிமுக, திமுக – உதயநிதி தான் டார்கெட்!

தற்போது உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றார். திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் என்ற விஷயம் காலங்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு. இதனை ஓரங்கட்டும் வகையில் கட்சியினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும். திராவிட அரசியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் தொடர்ச்சியாக பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட வேண்டும். மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால் திமுக இன்னும் பல ஆண்டுகள் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தகைசால் தந்தையே! தன்னிகரற்ற தலைவரே! முதல்வர்களில் மூத்தவரே! கலையுலக வேந்தரே! எங்களின் உயிரே! உணர்வே! தாங்கள் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் – நீங்கள் அமைத்த படியில் தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால் தான் வென்றபடியே இருக்கிறேன்! மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.