Musician Ilayaraja waits 7 hours at Chennai airport: இசையமைப்பாரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான இளையராஜா சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்து, பின்னர் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றும் இன்றும் அதிகாலையும் மழை பெய்தது. குறிப்பாக சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியிலும் இரவு முதல் காலை வரை மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் தாமதமானது. சென்னைக்கு வர வேண்டிய சில விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இதையும் படியுங்கள்: ஷாருக் கானுக்கு வில்லன்: விஜய் சேதுபதி சம்பளம் இத்தனை கோடிகளா?
அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமானது. ரன்வே-யில் தண்ணீர் இருந்ததாலும், மோசமான வானிலை, மேகமூட்டம் போன்ற காரணங்களாலும் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பலர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 7 மணி நேரத்திற்கும் மேலாக பல பயணிகள் காத்திருந்து, பின்னர் விமான பயணம் மேற்கொண்டனர்.
இப்படியாக காத்திருந்தவர்களில், இசையமைப்பாளரும் ராஜ்ய சபா எம்.பி.,யுமான இளையராஜாவும் ஒருவர். நிகழ்ச்சி ஒன்றுக்காக ஹங்கேரி செல்ல, இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். எம்.பி என்பதால் வி.ஐ.பி பகுதியில் அவர் காத்து இருந்தார். ஆனால் அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதமானது. இந்த விமானம் துபாய் சென்று அங்கிருந்து கனெக்டிங் விமானம் மூலம் ஹங்கேரிக்கு செல்ல வேண்டும்.
முதலில் இந்த விமானம் 2 மணி நேரம் தாமதம் என்று கூறப்பட்டது. அதன்பின் மேலும் 3 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது. ஆனாலும் சென்னை வானிலை சரியாகவில்லை. இதனால் மேலும் 2 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது. இதன் காரணமாக 7 மணி நேரமாக விமானத்திற்காக இளையராஜா காத்து இருந்து, பின்னர் ஹங்கேரி புறப்பட்டுச் சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil