wakefit co.. தூங்குவதற்கு ரூ.10 லட்சம் பரிசாம்.. நீங்க ரெடியா.. எப்படி அப்ளை செய்வது?!

தூங்கினால் சம்பளமா? அப்படின்னா அந்த வேலைய நான் நல்லாவே செய்வேன் என்கிறீர்களா? ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண் உங்களை விட முந்திவிட்டார். இதையெல்லாம் தாண்டி அதில் 5 லட்சம் ரூபாய் பரிசையும் வெற்றி பெற்றுள்ளார்.

எனினும் இன்னொரு வாய்ப்பும் காத்துக் கொண்டுள்ளது. wakefit co-ன் மூன்றாவது தூங்கும் போட்டிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போட்டிக்கு எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிப்பது? வாருங்கள் பார்க்கலாம். ஸ்டார்ட் அப் நிறுவனம் மூன்று ஆண்டுகளாகவே ஸ்லீப் இண்டர்ன்ஷிப் திட்டங்களை செய்து வருகின்றது.

தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!

தூங்கும் போட்டி

தூங்கும் போட்டி

இந்த திட்டத்தின் மூலம் ஒரு போட்டியையினையும் நடத்தி வருகின்றது. அதில் அதிக நேரம் நிம்மதியாக தூங்குபவர்களுக்கு மதிப்பெண் வழங்கி அதில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசும் கொடுக்கிறது. பல கட்டமாக நடைபெறும் இப்போட்டியாளர்களின் தூங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், லேசான உறக்கம் மற்றும் ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும்.

திரிபர்ண சக்ரவர்த்தி வெற்றி

திரிபர்ண சக்ரவர்த்தி வெற்றி

இப்படி நடத்தப்பட்ட போட்டியில் 4 போட்டியாளர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த இறுதி போட்டியில் கொல்கத்தாவை சேர்ந்த திரிபர்ண சக்ரவர்த்தி வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவருக்கு வெற்றி பெற்றதற்காக 5 லட்சம் ரூபாய் பரிசாகவும் கிடைத்துள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் மூன்றாவது சீசன்
 

விரைவில் மூன்றாவது சீசன்

இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் விரைவில் மூன்றாவது சீசனும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது போட்டியில் முதல் பரிசாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 100 நாள் தூங்க வேண்டும். அதில் 9 மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

எப்படி விண்ணபிப்பது?

எப்படி விண்ணபிப்பது?

இதற்காக https://www.wakefit.co/sleepintern/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்த இணையபக்கத்தில் சென்றதும் Apply for the job என்ற ஆப்சனை கிளிக் செய்தால், அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களுடைய பெயர், எதற்காக நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்கிறீர்கள். உங்கள் வயது என்ன? நீங்கள் ஆணா? பெண்ணா? உங்களின் மெயில் ஐடி, மொபைல் எண், எந்த மாநிலம், எந்த நகரம்? உள்ளிட்ட விபரங்களை கொடுத்து Continue ஆப்சனை கொடுத்து அப்டேட் செய்யவும்.

துங்குவதற்கு ஏற்ற சூழல்

துங்குவதற்கு ஏற்ற சூழல்

சமீபத்தில் வேக்ஃபிட்டின் இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்ககவுடா, இது குறித்த ஒரு பதிவினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நாசா மற்றும் ஹார்வர்ட் ஆய்வுகளை சுட்டிக் காட்டி, மதிய தூக்கம் செயல்திறனை மேம்படுத்துவதாகவும் கூறியிருந்தார். மேலும் மதிய தூக்கம் என்பது நினைவாற்றல், கவனம் செலுத்துதல், கற்பனை திறன், உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது என்று கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

wakefit co: Ready to take on the sleeping competition? A prize of Rs.10 lakhs

wakefit co: Ready to take on the sleeping competition? A prize of Rs.10 lakhs/தூங்குவதற்கு ரூ.10 லட்சம் பரிசாம்.. நீங்க ரெடியா.. எப்படி அப்ளை செய்வது?!

Story first published: Sunday, August 28, 2022, 13:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.