இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2022 ஓகஸ்ட்29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2022 ஓகஸ்ட்29ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாட்டின் ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில்அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டலநிலைமை காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும்மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில்75 மி.மீக்கும்அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (29ஆம் திகதி) மன்னியகுளம், அறிவியல் நகர் மற்றும் வலைஞர் மடம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.