அமெரிக்காவில் மூன்று கமாண்டோக்கள் மீது துப்பாக்கி சூடு: பயிற்சிக்கு வந்த வெளிநாட்டினருக்கு நேர்ந்த பரிதாபம்!


பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 3 டச்சு கமாண்டர்கள் மீது துப்பாக்கி சூடு.

வாக்குவாதம் ஹோட்டலுக்கு முன்பு தொடங்கவில்லை என பொலிஸார் விளக்கம். 

அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 டச்சு கமாண்டோக்கள் இண்டியானாபொலிஸில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கியால் சூடப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இண்டியானாபொலிஸில் உள்ள ஹாம்ப்டன் ஹோட்டலுக்கு வெளியே அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மூன்று டச்சு கமாண்டோக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக டச்சு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது, பயிற்சிக்காக இந்தியானா மாநிலத்தில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உள்ளூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மூன்று கமாண்டோக்கள் மீது துப்பாக்கி சூடு: பயிற்சிக்கு வந்த வெளிநாட்டினருக்கு நேர்ந்த பரிதாபம்! | Dutch Commandos Wounded Shooting Outside IndianaCNN

இந்தநிலையில் இந்த விசாரணையை கையாளும் இண்டியானாபோலிஸ் பெருநகர காவல் துறையின் அதிகாரி FOX 59 செய்தி நிறுவனத்திடம், இந்த தகராறு இண்டியானாபோலிஸ் நகரத்தில் உள்ள ஹாம்ப்டன் விடுதியில் தொடங்கவில்லை, அதற்கு முன்னதாகவே வேறொரு இடத்தில் வாக்குவாதம் நடைபெற்றதாக தெரிகிறது என தெரிவித்தார்.

மேலும் “இப்போது நாங்கள் வெளியிடத் தயாராக உள்ள தகவல் என்னவென்றால், அது ஹோட்டலுக்குள் நடந்த ஒன்று அல்ல” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: 90 நிமிடங்கள் காற்றில் மிதந்த ரோலர் கோஸ்டர்: மகளுக்காக தந்தை செய்த துணிகர செயல்

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கமாண்டோக்கள் யாருடன் பயிற்சி பெற்றனர் மற்றும் இந்த சம்பவத்தில் அமெரிக்கப் பணியாளர்கள் யாராவது ஈடுபட்டார்களா என்று கேட்டதற்கு, பென்டகன் செய்தித் தொடர்பாளர், நிலைமை விசாரணையில் உள்ளது எனத் தெரிவித்தார்.  

அமெரிக்காவில் மூன்று கமாண்டோக்கள் மீது துப்பாக்கி சூடு: பயிற்சிக்கு வந்த வெளிநாட்டினருக்கு நேர்ந்த பரிதாபம்! | Dutch Commandos Wounded Shooting Outside Indiana



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.