லக்னோ :உத்தர பிரதேசத்தில், விபத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தையின் பிரேத பரிசோதனைக்குப் பின் மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராததால், உடலை தந்தை கையில் துாக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு பாக்பத்தில் கார் மோதியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய பின், குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கூலித் தொழிலாளியானதந்தை, 50 கி.மீ., தொலைவில் உள்ள தன் கிராமத்திற்கு குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையிடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார்.
ஆனால், ‘வாகனம் இல்லை’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.தனியார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய அவரிடம் போதிய பணம் இல்லாததால், அவர் குழந்தையின் உடலை கையில் ஏந்திய
வாறு நடந்தே சென்று உள்ளார்.
சோர்வடைந்த போது, அவருடைய 10 வயது மகன், குழந்தையின் உடலை சிரமப்பட்டு துாக்கிச் சென்றுள்ளான். இது குறித்த ‘வீடியோ’ வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்புலன்ஸ் வழங்காத மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார்
தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement