இந்திய அணி அசத்தல் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தியது

துபாய்:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல் பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடக்க உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.