கடந்த வார இறுதியில் இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்தன. குறிப்பாக சர்வதேச சந்தையில் நிலவிய பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், வார இறுதியில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது.
எனினும் கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்டு முடிவடைந்திருந்தது. இதன் எதிரொலி இந்திய சந்தையில் இன்றைய தொடக்கத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இன்றைய சந்தை அமர்வில் மிகப்பெரிய தாக்கம் இருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?
முக்கிய லெவல்கள்
பைவேட் சார்ட்டின் படி, நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் 17,490 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 17,421 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 17,657 மற்றும் 17,754 புள்ளிகளாகவும் கணித்துள்ளனர்.
பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டி கடந்த அமர்வில் 36 புள்ளிகள் அதிகரித்து, 38,987 புள்ளிகளாகவும் இருந்தது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் கேண்டில் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளதால், இன்று தொடக்கத்தில் சந்தை சரிவினை காணலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதன் அடுத்த சப்போர்ட் லெவல் 38,777 புள்ளிகளாகவும், அதனை தொடர்ந்து 38,567 புள்ளிகளாகவும் கணித்துள்ளனர். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 39,267 புள்ளிகளாகவும், இதனை தொடர்ந்து 39,547 புள்ளிகளாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கால் & புட் ஆப்சன் டேட்டா
கால் ஆப்சன் டேட்டா மற்றும் புட் ஆப்சன் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதன் ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
ஹை டெலிவரி பர்சேன்டேஜ்
ஹை டெலிவரி பர்சேன்டேஜ் கொண்ட பங்குகள், பொதுவாக முதலீட்டாளார்கள் அதிக ஆர்வம் காட்டும் பங்குகளாக உள்ளன. இதில் ஹெச்டிஎஃப்சி, பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், பி எஃப் சி, இந்தஸ் டவர்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும். ஆக இன்று இவை கவனிக்கப்பட வேண்டிய பங்குகளாக உள்ளன.
நீண்டகால நோக்கில் ஏற்றம் காண வாய்ப்பு
ஒரு பங்கின் விலை அதிகரிக்காமல் அதன் ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால், அது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
இதே பங்கின் விலை சரியாமல், ஓபன் இன்ட்ரஸ்ட் அதிகரித்தால் அது, அப்பங்கின் விலை சரிவதற்கான வாய்ப்பாக இருக்கலாம்.
இதே ஒரு பங்கின் ஓபன் இன்ட்ரஸ்ட்ரேட் குறையும்போது, பங்கின் விலை அதிகரித்தால் அது ஷார்ட் கவரிங் ஆகவும் இருக்கலாம். ஆக இது ஓபன் இன்ட்ரஸ்ட் ரேட்டினையும் கவனத்தில் கொள்வது நல்லது.
மொத்த ஒப்பந்தங்கள்
ஓரியண்ட் எலக்ட்ரிக்: பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் திறந்த பரிவர்த்தனை மூலம் நிறுவனத்தில் 13,08,014 பங்குகளை விற்றுள்ளது. இதன் சராசரி விலை 261.79 ரூபாயாகும்.
ரோலக்ஸ் ரிங்க்ஸ்: பிஜிஐஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் இந்த மிட் கேப் நிறுவனத்தில் 2,63,433 பங்குகளை வாங்கியுள்ளது. இது மட்டும் அல்ல, ஐசிஐசிஐ புருடென்ஷியல், பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ், கனரா ரோபெகோ, ஆதித்யா பிர்லா சன் லைஃப் உள்ளிட்ட பல மியூச்சுவல் பண்டுகளும் பங்குகளை வாங்கியுள்ளன.
சப்பையர் ஃபுட்ஸ்: இந்த நிதி நிறுவனத்தில் 3,43,250 ஈக்விட்டி பங்குகளை விற்பனை எடில்வைஸ் பைனான்ஸ் மற்றும் நிதி நிறுவனம் சமர்பித்துள்ளது.
முதலீட்டாளார்கள் கூட்டம்
ஆகஸ்ட் 29 அன்று அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதே போல உஜ்ஜீவன் பைனான்ஸ் பேங்க், இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், எஸ் ஆர் எஃப், க்ராம்ப்டன் குரோவ்ஸ், ப்ளு ஸ்டார், ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ், ஆசியான ஹவுஸிங் உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் முதலீட்டாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன.
பங்கு செய்திகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது வருடாந்திர கூட்டம் இன்று மதிம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்ற குழும உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இது நடப்பு ஆண்டிற்கான திட்டத்தினை அறிவிக்கலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிப்லா நிறுவனத்தின் கோவா ஆலையில் ஆகஸ்ட் 16 – 26 வரையில் USFDA ஆய்வு நடத்தியது. ஆக அதன் எதிரொலியும் இன்று சந்தையில் இருக்கலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ஜீன் இண்டர்நேஷனல்: இந்த நிறுவனம் புதுபிக்கதக்க ஆற்றல் நிறுவனத்தின் 26% பங்குகளை கையக்கப்டுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
NHPC: இந்த நிறுவனம் ஹிமாச்சல பிரதேச அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இது தவிர ஜூபிலண்ட் பார்மா, RITES, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் உள்ளன.
அன்னிய முதலீடுகள்
ஆகஸ்ட் 26 நிலவரப்படி, என் எஸ் இ தரவுகளின் படி அன்னிய முதலீடானது 51.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 453.59 கோடி ரூபாய் மதிப்பிலானபங்குகளை வாங்கியுள்ளனர்.
எஃப் & ஓ தடை
எஃப் & ஓ தடை பட்டியலில் தற்போதைக்கு எந்த பங்கும் கிடையாது. இன்றைய சந்தை அமர்வில் ஏதேனும் பங்குகள் இந்த தடை பட்டியலில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trade setup for Monday: Top 10 things to know before opening bell
Trade setup for Monday: Top 10 things to know before opening bell/இன்று சந்தையின் தலைவிதியினை தீர்மானிக்கும் 10 விஷயங்கள்.. கவனமா இருங்க!