இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு கடந்த வாரம் தடை விதித்து இருந்தது.
இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய இம்ரான் கான், இஸ்லாமாபாத் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவர் இம்ரான் கானின் உரைகளை நேரலையாக ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது.
இந்த நிலையில் இம்ரான் கானின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு பாகிஸ்தான் ஊடக அமைப்பு விதித்த தடையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதர் மினல்லா, பாகிஸ்தான் ஊடக கண்காணிப்பு குழு தனது அதிகாரத்தை மீறியதாக தெரிவித்தார்.
மேலும் அவர்கள் விதித்த தடையை நியாயப்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.