இந்தியா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் பொருளாதாரச் சரிவாலும், நிதி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் பெட்ரோலிய துறையில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுவரையில் கண்டிராத பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் சிக்கியுள்ளது, இது அந்நிய செலாவணி கையிருப்பின் கடுமையான பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை தற்போது எந்த நாடு உதவினாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் காரணத்தால் பல நாடுகள் இலங்கை சந்தையைக் கைப்பற்ற உதவுகிறது.
எலான் மஸ்க் திடீர் மனமாற்றம்.. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு அதிகமாக தேவை..!
இலங்கை
இலங்கையில் தற்போது பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ய ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது.
24 நிறுவனங்கள்
இந்த 24 நிறுவனங்கள் தற்போது இலங்கை பெட்ரோலிய சந்தை பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்ய விருப்ப விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரத் தெரிவித்தார்.
சொந்த நிதி
ஜூலை மாதம், பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருக்கும் நிறுவனங்களின் சொந்த நிதியைப் பயன்படுத்தி இலங்கையில் நீண்ட கால அடிப்படையில் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் விருப்ப விண்ணப்பத்தை அழைப்பு விடுத்திருந்தது.
ஆறு வாரங்களில் முடிவு
அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட குழு இப்போது இந்த 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் சமர்ப்பித்த விருப்ப விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து, முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகளை வெளியிடும். இதேபோல் ஆறு வாரங்களில் செயல்முறையை இறுதி செய்யும் என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
கடந்த மாதம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், 50 பெட்ரோல் பங்க் புதிதாகத் திறக்கவும், சேமிப்புத் தொட்டிகள் மற்றும் பிற உபகரணங்களில் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
10 countries interested to sell petroleum products in Sri Lanka
10 countries interested to sell petroleum products in Sri Lanka | இலங்கை சந்தையைப் பிடிக்க 10 நாடுகள் போட்டி.. அடேங்கப்பா..!