எம் சாண்ட் கொண்டு கட்டப்படும் கட்டடங்களில் இது முக்கியம்: அமைச்சர் அறிவிப்பு!

சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 2016 ஆம் ஆண்டு தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை கட்ட 78 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது.

2019ஆம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வர இருந்தது ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது அதனால் இந்த மையத்தை கொரோனா வார்டாக மாற்றப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்ததால் தற்போது மீண்டும் தேசிய முதியோர் நல மருத்துவ மையமாக மாற்றலாம் என்று நினைத்த பொழுது இங்கு இருக்கும் சுவர் அனைத்தும் உதரத் தொடங்கியது. எனவே இந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய ஐஐடி கட்டிட பொறியியல் துறை தலைவர் மனுசந்தானம் தலைமையில் மே மாதம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஜூலை மாதம் ஆய்வு மேற்கொண்டு முழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தார்கள்.

அந்த அறிக்கையில் கட்டட உறுதி தன்மை நன்றாக உள்ளது என்றும் ஆனால் பூசி வேலை மட்டுமே சரியாக இல்லை என்று தெரிய வந்தது. எம் சாண்டில் ரசாயனம் சரியாக கலந்து பூசி வேலை செய்யாததாலும் தண்ணீர் சரியாக ஊற்றாததாலும் தான் இதுபோன்று உதவுகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் அந்த அந்தக் குழு மூன்று பரிந்துரைகளை முன் வைத்தது.

எம் சாண்டில் ரசாயனம் கலந்து பூச்சு வேலையில் ஈடுபட வேண்டும். இந்த மருத்துவ மையம் ஒட்டி மழை நீர் வடிகால் சென்று கொண்டிருக்கிறது. அதை 2 அடி சற்று தள்ளி வைக்க வேண்டும். பூச்சு வேலை முடிந்த பிறகு தண்ணீர் சரியாக ஊற்றி ஈரப்பதம் 200 சதவீதமாக இருக்க வேண்டும், ஆகிய மூன்று பரிந்துரைகளை முன் வைத்தது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரர் பெரியசாமிக்கு கடிதம் மூலம் விளக்கம் கேட்டோம். எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தால் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்போம் என்றனர்.

தற்போது அவர்கள் தானாக முன் வந்ததால் அவர்கள் தற்போது பணி தொடங்கிவிட்டனர். இதை கண்காணிக்க இரண்டு உதவி பொறியாளர்களை நியமனம் செய்துள்ளோம்.

இரண்டு இடங்களில் மட்டுமே மணல் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 38 மாவட்டங்களுக்கு இரண்டு இடங்களில் இருந்து மணல் எடுப்பது என்பது நடக்காத காரியம். எனவேதான் எம் சென்ட் பயன்படுத்தப்படுகிறது. எம் சாண்ட் பயன்படுத்தலாம் என்று அரசாணை உள்ளது. இனி வரும் காலங்களில் பொதுப் பணி துறையின் கீழ் கட்டப்படும் கட்டிடங்களின் திட்ட மதிப்பீட்டில் ரசாயன கலவையும் இடம்பெறும்.

தமிழகத்தில் எங்கிருந்து எங்களுக்கு புகார் இருந்தாலும் நாங்கள் அதை கண்காணித்து நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.