டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமைகளை பெற்று உள்ளது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இனி ஹாட்ஸ்டார் சேனலில் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?
2024-2027
2024 ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐசிசி சார்பில் நடத்தும் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
இருமடங்கு தொகை
இந்த உரிமையை பெறுவதற்கு 11,500 கோடி ரூபாய் என ஐசிசி விலை நிர்ணயித்து இருந்த நிலையில் அதைவிட இரு மடங்கு தொகை கொடுத்து அதாவது ரூ.24,000 கோடி கொடுத்து ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு உரிமையை ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ஸ்டார் அதிபர் மாதவன்
இதுகுறித்து ஹாட்ஸ்டார் அதிபர் கூறியபோது, ‘ஐசிசி உடன் மீண்டும் இணைந்து பயணம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும், கடந்த 7 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளை இந்தியாவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு வருகிறது என்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய சேவை செய்வதில் நாங்கள் பெரும் பங்காற்றி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒளிபரப்பு உரிமை
மக்கள் தொகை அடிப்படையில் பார்வையாளர்களின் தளத்தை விரிவுபடுத்துவது எங்கள் நோக்கம் என்றும் குறிப்பாக கிரிக்கெட், புரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் விம்பிள்டன் சாம்பியன் ஷிப் ஆகிய போட்டிகளை ஒளிபரப்புவதற்கான சர்வதேச உரிமைகளை பெறுவதில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்
மேலும் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கும் ஹாட்ஸ்டார் மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவதற்கான ஏலம் எடுப்பதில் கடுமையாக போட்டி இருந்தாலும் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு உரிமையை ஏலத்தில் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
எத்தனை போட்டிகள்
2024 ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை இந்திய அணி விளையாடும் 31 போட்டிகள், வங்கதேச அணி விளையாடும் 23 போட்டிகள், இங்கிலாந்து அணி விளையாடும் 33 போட்டிகள் மற்றும் இலங்கை அணி விளையாடும் 16 போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ICC media rights value doubles up as Disney hotstar!
ICC media rights value doubles up as Disney hotstar! | ஐசிசி கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை.. இருமடங்கு தொகைக்கு ஏலம் எடுத்த ஹாட்ஸ்டார்!