தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உடல்நலக்குறைவுடன் சுற்றி வந்த காட்டு யானையை, பணப்பள்ளி வனப்பகுதியில் தமிழக வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 15-ம் தேதி முதல் ஆனைக்கட்டி வனப்பகுதியில் சுற்றி வரும் காட்டு யானையை கண்டறிய தமிழக-கேரள வனத்துறையினர் சார்பில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது.
பணப்பள்ளி வனப்பகுதியில் யானை இருப்பதை கண்டறிந்த தமிழக வனத்துறையினர், அதனை சமதள பகுதிக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளனர்.