காந்தி நகர்: இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இரு மாதங்களுக்குப் பின்னர் இப்போது திடீர் திருப்பம் அரங்கேறி உள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் பிரதாப் சிங் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டார். முதலில் இதைத் தற்கொலை என்றே போலீசார் நினைத்தனர்.
இருந்த போதிலும், ரோஹித் பிரதாப் சிங் தற்கொலை செய்து கொண்டதால் குஜராத் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
குஜராத்
இந்த தற்கொலை சம்பவம் ஜூன் மாதம் அரங்கேறி உள்ளது. இந்நிலையில், இரு மாதங்களுக்குப் பின்னர் இப்போது இந்த தற்கொலை தொடர்பாக ரோஹித் பிரதாப் சிங்கின் மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்கு முன்பு, ரோஹித் பிரதாப் சிங் எழுதிய கடிதத்தையும் போலீசார், அவரது சமூக வலைத்தள பக்கத்தில் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
தற்கொலை
ரோஹித் பிரதாப் சிங் தனது தற்கொலை கடித்ததில் மாட்டிறைச்சி சாப்பிட மறுத்ததால் மனைவியும் மைத்துனரும் தன்னை மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில், “நான் இந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன். எனது மரணத்திற்குக் காரணம் எனது மனைவி சோனம் அலி மற்றும் அவரது சகோதரர் அக்தர் அலி தான். அவர்களுக்கு உரியத் தண்டனையை எனது நண்பர்கள் பெற்றுத் தர வேண்டும்.
தற்கொலை கடிதம்
அவர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், மாட்டிறைச்சியையும் ஊட்டினர். இனி இந்த உலகில் வாழ எனக்குத் தகுதி இல்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று அவர் தனது தற்கொலை குறிப்பில் தெரிவித்துள்ளார். ரோஹித் பிரதாப் சிங் தற்கொலை செய்து கொண்டு இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இப்போது தான் இதை அவரது உறவினர்கள் பார்த்துள்ளனர்.
தாயார்
இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து ரோஹித் பிரதாப் சிங் தாயார் வானிதேவி தனது பிள்ளையின் தற்கொலைக்கு சோனம் அலி மற்றும் சகோதரர் அக்தர் அலி தான் காரணம் என போலீஸில் புகார் அளித்தனர். தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
காதல்
சில ஆண்டுகளுக்கு முன்னர், ரோஹித் ராஜ்புத் மற்றும் சோனம் இருவரும் குஜராத்தின் சூரத்தில் ஒன்றாக பணிபுரிந்தனர். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றிய நிலையில், அவர்கள் மெல்லப் பேசி பழகத் தொடங்கி உள்ளனர். இது விரைவில் காதலாக மாறியது. தங்கள் காதல் குறித்து இருவரம் தம்தம் வீட்டில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், சோனம் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் ரோஹித்தின் குடும்பத்தினர் காதலுக்கு முட்டுக் கட்டை போட்டுள்ளார்.
சம்மதிக்கவில்லை
மேலும், சோனத்தை திருமணம் செய்து கொண்டால் ரோஹித்துடனான அனைத்து உறவுகளையும் முறித்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இருப்பினும், அது எல்லாவற்றையும் கடந்து ரோஹித், சோனத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக ரோஹித்திற்கு அவரது குடும்பத்தினருடன் பெரியளவில் பழக்க வழக்கம் கடந்த ஓராண்டாகவே இல்லை எனக் கூறப்படுகிறது.