கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் பல வங்கிகள் இந்த கடன்களை வழங்குவதால் கல்லூரி மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது கல்லூரி படிப்பு போலவே பள்ளிப்படிப்பு மிகவும் அதிக செலவுள்ள ஒன்றாக மாறிவிட்டதால் பள்ளி குழந்தைகளுக்கும் எளிய தவணை முறையில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் தோன்றி உள்ளன.
இதன் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை எளிய தவணை முறையில் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?
பள்ளி கட்டணம்
தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைப்பது ஒரு மிகப் பெரிய செலவாக பெற்றோர்களுக்கு உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை கட்ட முடியாமல் பல பெற்றோர்கள் சிரமப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி நிறுவனங்கள்
இந்த நிலையில் பள்ளி கட்டணங்கள் கட்டுவதற்கு நிதி உதவி செய்யும் நிதி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தற்போது சேவை செய்து வருகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இந்த நிதி நிறுவனங்களிடம் கல்வி கடன் பெற்று தங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். இது பெற்றோர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.
ஸ்கூல் ஃபீஸ் ஃபினான்ஸ்
ஸ்கூல் ஃபீஸ் ஃபைனான்ஸ் என்ற கல்விக்கடன் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷனாக இருந்தாலும் அவற்றின் சிக்கலான பிராசஸ் மற்றும் அதிக வட்டி காரணமாக பல பெற்றோர்கள் அதனை பயன்படுத்துவதில்லை.
பைனான்ஸ் பீர்
இந்த நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் கட்டுவதற்கு மிகவும் எளிதான வகையில் உதவுவதற்கு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றில் ஒன்று பைனான்ஸ் பீர் (Finance peer). இந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் ரோஹித் கஜ்பியே அவர்கள் கூறியபோது, ‘பள்ளி கட்டணம் கட்டுவதற்கு பெற்றோர்கள் குறைந்த வட்டியில் எளிய தவணையில் எங்கள் நிறுவனத்திடம் கடன் பெற்றுக் கொள்ளலாம்’ என்று அறிவித்துள்ளார்.
எளிய தவணைகள்
பள்ளி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்கள் எங்கள் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டால் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் பள்ளிக்கு நாங்கள் செலுத்தி விடுவோம் என்றும் அதை பெற்றோர்கள் எளிதாக தவணை முறையில் திருப்பி செலுத்தலாம் என்றும் ரோஹித் அறிவித்துள்ளார்.
உத்தரவாதம் தேவையில்லை
மேலும் பள்ளி கட்டணம் செலுத்தும் நிதி உதவிக்கு எந்தவிதமான உத்தரவாதமும் தேவையில்லை என்றும் டிஜிட்டல் முறையில் ஒரு சில நிமிடங்களில் பள்ளி கட்டணம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிபில் ஸ்கோர்
மேலும் பள்ளி குழந்தைகளுக்கு கட்டணம் கட்ட நிதி வாங்கும் பெற்றோர்களின் சிபில் ஸ்கோர் பொருட்படுத்துவதில்லை என்றும் அதனால் எந்த சிபில் ஸ்கோர் இருக்கும் பெற்றோர்களும் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்றும் ரோஹித் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது போலவே பள்ளி மாணவர்களுக்கும் சில நிதி நிறுவனங்கள் கல்விக் கடன் வழங்கி வருவது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Companies provide financial assistance to pay children school fees!
Companies provide financial assistance to pay children school fees! | கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, பள்ளி கட்டணம் கட்டுவதற்கும் லோன்.. எளிய EMI ஆப்ஷன்கள்!