கொய்யா மரங்களின் விளைச்சலைப் பெருக்க விவசாயிகளுக்கு பயிற்சி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பன்னீர்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கான 
ஏற்பாடுகளை அலுவலர் இளங்கோ, உதவி அலுவலர்கள் சரவணகுமார், கருப்பசாமி, செண்பககுமார், வனிதா மாரி ஆகியோர் செய்தனர். 

இதற்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மலர் தலைமை தாங்கிய நிலையில், தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தரராஜன் கொய்யா மரங்களில் விளைச்சலை பெருக்கவும், அதற்கான வழிமுறைகளையும் குறித்து விவசாயிகளிடம் பேசினார்.

மேலும், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், வேல்முருகன் கொய்யா சாகுபடி மேலாண்மை குறித்தும் பேசினார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகம் பதில் அளித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு விளைச்சலை பெருக்குவதற்கான வழிமுறைகையும் கற்று வந்தனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.