கோவை: கோவையில் 1 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அவினாசி சாலை, இரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவினாசி மேம்பாலம், லங்கா கார்னர் சுரங்க பாதைகளில் நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க அவதிப்பட்டு வருகின்றனர்.