சசிகலா கொடுத்த உத்தரவாதம்: ஆனால் இத மட்டும் பாத்துக்கோங்க!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற

தண்டனை காலம் முடிந்து திரும்பியதும் அதிமுக அவரை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்தே ஒதுங்கியிருக்கப்போவதாக அறிக்கை விட்டு அந்த எதிர்பார்ப்புகளை புஸ்வானமாக்கினார் சசிகலா. அவரது இந்த அறிவிப்புக்கு பின்னால் பாஜக இருந்ததாக அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசியலில் அவருக்கு பெரிதாக ஏறுமுகம் இல்லை.

அதிமுக பொதுச்செயலாளர் என்ற லெட்டர் பேடை பயன்படுத்தினார், அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்தார், தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டார். இப்படி கட்சியை கைபற்றுவதற்கு எத்தனையோ நடவடிக்கைகளை அவர் எடுத்தாலும் எந்த பலனும் இல்லை. குறுகிய காலத்தில் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டது, பொதுச்செயலாளர் வழக்கில் பின்னடைவு உள்ளிட்டவற்றையே சசிகலா சந்தித்தார்.

ஆனால், சமீபகாலமாக சசிகலாவின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. மிகவும் உற்சாகத்தோடு காணப்படுகிறார். இதற்கான காரணங்களை விசாரித்தால் டெல்லியின் அனுசரணையான பார்வை விழுந்திருப்பதாகவும், சின்னம்மாவின் பவர் பற்றி இப்போதுதான் பாஜகவுக்கு தெரியவந்திருக்கிறது என்றும் மகிழ்ச்சியோடு பேசுகிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். கடந்த தேர்தலில் டிடிவி தினகரன் பிரித்த வாக்குகள் அதிமுகவுக்கு பல இடங்களில் தோல்வியை ஏற்படுத்தித் தந்தது. சசிகலாவுக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு வட்டம் அதிகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு பாஜக க்ரீன் சிக்னல் காட்டியுள்ளதாக கூறுகிறார்கள்.

மக்களவை தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ள பாஜக தமது தரப்பில் முக்கிய பிரமுகர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருந்தது. சசிகலாவின் பிறந்தநாளனறு அந்த பிரமுகர் சசிகலாவை ரகசிய இடத்தில் வைத்து சந்தித்துள்ளார். அப்போது, கட்சியை மட்டும் தனது தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும். தேர்தலில் போட்டியிட போவதில்லை. ஆட்சி அதிகாரமெல்லாம் தனக்கு தேவையில்லை. அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும். அவரவர்களுக்கு உரிய மரியாதை அதிகாரம் பதவிகள் எவ்வித சிக்கலும் இல்லாமல் கொடுக்கப்படும். ஜெயலலிதா விட்டு சென்ற கட்சியை எவ்வித பிளவும் இல்லாமல் கட்டுக்கோப்பாக வழி நடத்தி செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனை கேட்டுக் கொண்ட அந்த பிரமுகர் டெல்லி மேலிடத்திடம் இந்த மெசேஜை உடனடியாக பாஸ் செய்துள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலாவின் தயவில்லாமல் அதிமுகவில் யாரும் எந்த பதவிக்கும் வந்திருக்க முடியாது. எனவே, கட்சியின் அத்தனை நிர்வாகிகள் பற்றியும் அவர்களது மூவ் பற்றியும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும் என்பதால் டெல்லியும் க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாக கூறுகிறார்கள். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களின் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும், முடங்கியிருக்கும் சொத்துக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சசிகலா கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, சொத்துகளில் உள்ள சில சிக்கல்களில் நீங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் நிழல் உலகத்திலேயே வலம் வந்த சசிகலா, திடீரென கட்சியை கட்டுக்குள் கொண்டு வர ஆசைப்படுவதற்கான காரணம் பற்றி அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது, “சசிகலா ஏற்கனவே சிறை சென்று திரும்பி விட்டார். அவரது சொத்துக்களும் குறுகிய காலத்தில் முடக்கப்பட்டன. தனது சொத்துக்களை காப்பாற்ற வேண்டுமெனில் அதற்கு ஏதேனும் அதிகாரம் அவரது வசம் இருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று பொதுமக்களிடம் அவர் செல்வாக்கு பெற்ற தலைவர் அல்ல. எனவே, தேர்தல் அரசியல் என்பது அவருக்கு சரி வராது. எனவே, கட்சி அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டு வந்து விட்டால், அதன் மூலம் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும். தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை பாதுகாக்க சில நூறு கோடிகளை அவர் செலவழிக்க தயங்குவதற்கு வாய்ப்பில்லை.” என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.