சத்தமில்லாமல் சொத்தை பிரித்த முகேஷ் அம்பானி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடந்திர பொதுக்கூட்டம் இன்று நடைப்பெற்ற நிலையில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி வெளிப்படையாகத் தனது வாரிசுகளுக்கு எந்தெந்த துறைகள் வழங்கப்பட்டு உள்ளது என்பதை உடைத்துள்ளார்.

இதனால் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோருக்கு தனித்தனி நிர்வாகப் பொறுப்புகள் அளிக்கப்பட்டுத் துறைவாரியான வளர்ச்சிக்கு புதிய அணிகளையும் உருவாக்கியுள்ளார் முகேஷ் அம்பானி.

5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானிக்கு 65 வயதான நிலையில் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வாரிசு கைகளுக்குக் கொடுக்கும் முடிவை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் குடும்பத் தினத்தில் வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் இதற்கான பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி

முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி

திருபாய் அம்பானி இறந்த உடன் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சொத்துக்களுக்காக எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது யாராலும் மற்றக்க முடியாது. இதேபோன்ற பிரச்சனை தனது 3 பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோருக்கு வர கூடாது என்பது உறுதியாக இருந்தார் முகேஷ் அம்பானி.

ஆகாஷ் மற்றும் ஈஷா அம்பானி
 

ஆகாஷ் மற்றும் ஈஷா அம்பானி

இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை 3 ஆகப் பிரித்து 3 பிள்ளைகளுக்கும் அளிக்கத் திட்டமிட்டு உள்ள முகேஷ் அம்பானி இன்று நடந்த 45 வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஆகாஷ் மற்றும் ஈஷா-வுக்கு டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவில் தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அனந்த் அம்பானி

அனந்த் அம்பானி

இதேபோல் அனந்த் அம்பானி-க்கு நியூ எனர்ஜி துறையின் முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டுத் தலைமை பொறுப்பை ஏற்க தகுதி அடைந்து வருகிறார், அனந்த் அம்பானி தான் பெரும்பாலான நாட்கள் குஜராத் ஜாம்நகரில் தான் தங்குகிறார் என முகேஷ் அம்பானி கூறினார்.

குஜராத் - ஜாம்நகர்

குஜராத் – ஜாம்நகர்

குஜராத் மாநில ஜாம்நகரில் தான் 60000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கும் திருபாய் அம்பானி கிரின் எனர்ஜி ஜிகா காம்பிளக்ஸ் நிறுவப்பட்டு வருகிறது. இந்தக் காம்பிளக்ஸ்-ல் 4 ஜிகா பேக்டரி அமைக்கப்பட உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் முதலாவது போட்டோபோல்டாயிங் பேனல், 2வது எனர்ஜி ஸ்டோரேஜ், 3வது கிரீன் எனர்ஜி, 4வது பியூயல் செல் சிஸ்டம்ஸ், தற்போது 5வதாகப் பவர் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

ஆனால் ஆகாஷ் அம்பானியின் சேர்மன் பதவி மட்டுமே அதிகாரப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது, ஆனால் ஈஷா அம்பானிக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் தலைமை பொறுப்பு குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani succession plan: Leadership Transition Roadmap announced 45th AGM

Mukesh Ambani succession plan: Leadership Transition Roadmap announced 45th AGM சத்தமில்லாமல் சொத்தை பிரித்த முகேஷ் அம்பானி..!

Story first published: Monday, August 29, 2022, 19:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.