சாதனை படைத்த இந்திய பாகிஸ்தான் மேட்ச்..! ஆனா 2வது இடம் தான்..!

கிரிக்கெட் என்றாலே இந்தியர்கள் கொண்டாட்டம் தான், இதுவும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்றால் சொல்லவா வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் புதிதாக நேற்று ஒரு விஷயம் நடந்துள்ளது இதுவும் முக்கியமான பல வருட சாதனைகள் முறியடிக்கப்பட்டு மாஸ் காட்டியுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டம் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றால் மிகையில்லை. இதேவேளையில் கிரிகெட் பார்ப்பவர்கள் மத்தியில் அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என ஐபிஎல் போட்டி பார்த்துக் கூறியவர்களுக்கு நேற்றைய போட்டி புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.

நேற்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச்-ன் போது வியூவர்ஷிப் எண்ணிக்கையில் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

ஐசிசி கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை.. இருமடங்கு தொகைக்கு ஏலம் எடுத்த ஹாட்ஸ்டார்!

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை போட்டியின் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியை மட்டும் சுமார் 13 மில்லியன் அதாவது 1.3 கோடி கணக்குகளில் இருந்து மக்கள் கண்டுகளித்துள்ளனர். இது இந்திய லைவ் ஸ்ட்ரீமிங் வரலாற்றில் 2வது பெரிய எண்ணிக்கையாக உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

இந்தியா பாகிஸ்தான் மேட்ச் என்பதால் ஆரம்பம் முதல் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மேட்ச்-ஐ பார்த்தனர், 4வது ஓவரின் போது 84 லட்சம் பேர் பார்த்தனர். இதேபோல் 14வது ஓவரில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வீழ்த்தியபோது பார்வையாளர்களின் எண்ணிக்கை 87 லட்சமாக அதிகரித்தது.

 டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளம்
 

டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளம்

இந்திய அணியின் பந்துவீச்சின் போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வலுவான பார்வையாளர்களை ஈர்த்தது, கடைசி ஓவரின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியனைத் தொட்டது. இந்திய அணி பேட்டிங்-ஐ தொடங்கிய போது 95 லட்சம், 3வது ஓவரின் போது 97 லட்சம், விராத் கோலி சிக்ஸ் அடித்தபோது 99 லட்சம் இப்படிப் படிப்படியாக உயர்ந்த எண்ணிக்கை….

 விராத் கோலி, ரோஹித் சர்மா பார்ட்னர்ஷிப்

விராத் கோலி, ரோஹித் சர்மா பார்ட்னர்ஷிப்

விராத் கோலி, ரோஹித் சர்மா பார்ட்னர்ஷிப்-ன் போது 5வது ஓவரில் 1 கோடி என்ற எண்ணிக்கை அளவை எட்டியது. இதைத் தொடர்ந்து 17வது ஓவரின் போது 1.2 கோடி வாடிக்கையாளர்கள், போட்டியின் கடைசி ஓவரில் இதன் எண்ணிக்கை 1.3 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் இதுவரையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் 12வது சீசனின் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் தளம் 12 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது, பின்னர் அதே சீசனின் இறுதிப் போட்டியில் 18 மில்லியனுடன் முறியடிக்கப்பட்டது. இதனால் முதல் இடத்தில் இருக்கும் போட்டி இதுதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India-Pakistan faceoff takes digital viewership records 13 million in Disney+Hotstar

India-Pakistan faceoff takes digital viewership records 13 million in Disney+Hotstar தனை படைத்த இந்திய பாகிஸ்தான் மேட்ச் ..! ஆனா 2வது இடம் தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.