கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13 ம்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து ஜூலை 17 ம்தேதி நடந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் மற்றும் பள்ளி பஸ்களை உடைத்து சேதப்படுத்தி தீவைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் இதுவரை 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வசந்தன்(19), போலீஸ் வாகனத்தை எரித்ததாகவும், பரமேஸ்வரன்(23) பள்ளி பஸ்சை எரித்ததாகவும், சஞ்சீவ்(22) போலீசார் மீது கற்களை வீசியதாகவும், பூவரசன் (எ) மாயி(27) மாட்டை திருடியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். அதன்படி வசந்தன் உள்ளிட்ட 4 பேரையும் சின்னசேலம் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.