அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார், தற்போது இவர் கைவசம் மூன்று படங்கள் உள்ளது. பதான் படத்தின் இவர் தனது காட்சிகளை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டார் , அதனைத்தொடர்ந்து தற்போது டன்கி மற்றும் ஜவான் படத்தில் பிசியாக இருந்து வருகிறார். ‘ஜவான்‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடத்தப்படுகிறது, சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஷெட்யூல் போடப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் விமான நிலையம் வந்திறங்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது. தற்போது இங்கு நடைபெறவுள்ள படப்பிடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் மற்ற நட்சத்திரங்களுடன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்புக்கான ஷெட்யூல் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதால் ‘டன்கி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஷாருக்கானுக்கு வெகு நாட்களாகும். மேலும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு மிகப்பெரிய படமான ‘பதான்’ படத்தின் தலைப்பை ஷாருக்கான் மாற்றப்போவதாக செய்திகள் எழுந்து வந்தது. ஆனால் படத்தின் தலைப்பு மாற்றப்படவில்லை, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஆக்ஷன் திரைப்படமான ஜவான் படம் ஜூன்-2, 2023 திரையில் வெளியாகும் என்று செய்திகள் கூறப்படும் நிலையில் வெளியீட்டு தேதி மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார், அடுத்ததாக ‘டன்கி’ படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார்.
‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது. மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க அவருடன் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு 21 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.