செம சர்பிரைஸ்.. தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சற்று சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் அவுன்ஸுக்கு 1740 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 1% கீழாக சரிவினைக் கண்டிருந்த தங்கம் விலையானது, இன்றும் அதன் தொடர்ச்சியாக சரிவில் காணப்படுகின்றது.

வரவிருக்கும் செப்டம்பர் மாத கூட்டத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவலின் பேச்சு, கட்டாயம் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அமெரிக்க பொருளாதாரத்தினை பிரதிபலிக்கும் விதமாக விவசாயம் அல்லாத பே ரோல் தரவனானது வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே அமெரிக்க டாலருக்கு சாதகமாகவே வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வரும் நிலையில், தற்போது பே ரோல் தரவும் சாதகமாக இருந்து விட்டால், அது மேற்கொண்டு தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 வெள்ளிக்கிழமை நிலவரம்
 

வெள்ளிக்கிழமை நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்கு சந்தையானது கடும் வீழ்ச்சியினை கண்ட நிலையில், இன்று அதன் எதிரொலி இந்திய சந்தை உளளிட்ட மற்ற சர்வதேச சந்தைகளில் இருக்கலாம் இன்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

உற்பத்தி தரவு

உற்பத்தி தரவு

அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ளது. இதுவும் வட்டி அதிகரிப்பினை மேற்கொண்டு தூண்டலாம். ஆக இதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. மொத்தத்தில் இனி வரும் பொருளாதாரம் குறித்தான தரவுகள் ஒவ்வொன்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெறும் ஒன்றாக உள்ளன.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 12.10 டாலர்கள் குறைந்து, 1737.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.61% குறைந்து, 18.438 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இதே கடந்த அமர்வில் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 29th August 2022: gold prices remains below $1740 after jerome powell speech

gold price on 29th August 2022: gold prices remains below $1740 after jerome powell speech/செம சர்பிரைஸ்.. தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

Story first published: Monday, August 29, 2022, 7:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.