ஜியோ கிளவுட் கணினி.. ரிலையன்ஸின் அடுத்த கேம் சேஞ்சர் திட்டம் பற்றி தெரியுமா!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஜியோ ட்ரூ 5ஜி கீழ், ஜியோ கிளவுட் கணினி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது ஒரு மெய் நிகர் கணி. இது லேடாப், கணினி போன்றவற்றுக்கான ஒரு மாற்றும் சாதமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது மிகவும் மலிவு விலைக்கு வரும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

reliance agm 2022: 5ஜி குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த ஆகாஷ் அம்பானி.. !

ஜியோ கிளவுட் கணினி

ஜியோ கிளவுட் கணினி

ஜியோ கிளவுட் கணினி பயன்பாட்டுக்கு வந்தால் மக்கள் கணினி, லேடாப் போன்றவற்றுக்கு ஆகும் செலவுகள் குறையும். புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது இது தானாகவே அதன் அம்சங்களைச் சேர்த்து வழங்கும்.

செலவுகள் குறையும்

செலவுகள் குறையும்

உயர் தரமான கணினி வாங்க வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவாகும். எனவே தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நாம் புது கணினி அல்லது லேட்டாப் வாங்கி பயன்படுத்துவோம் ஆனால் இது கேம் சேஞ்சராக அந்த செலவுகளைக் குறைக்கும் என ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிரான் தாமஸ் கூறியுள்ளார்.

விலை எவ்வளவு?
 

விலை எவ்வளவு?

ஜியோ கிளவுட் கணினி சாதனம் ஒரு செட்-டாப் பாக்ஸ் அல்லது ஆப்பிள் கணினி CPU போல தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் விலை என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

ஜியோ கிளவுட் கணினி பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இணையதளம் கண்டிப்பாகத் தேவைப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அது குறித்த விவரங்களும் தற்போது தெரியவில்லை.

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

2022 தீபாவளி முதல் ஜியோ 5 ஜி சேவி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் கிடைக்கும். டிசம்பர் 2023-க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும். உலகின் வேகமாக 5ஜி சேவையை செயல்படுத்தும் நிறுவனமாக ஜியோ இருக்கும்.

4ஜி தேவையில்லை

4ஜி தேவையில்லை

4ஜி சேவை இல்லாமலேயே ஜியோ 5ஜி சேவை கிடைக்கும். பிற நெட்வொர்க்குகல் போல 5ஜி, 4ஜி என இரண்டு சேவைகள் மாறி வராது என்பது தனி சிறப்பு என ஜியோ தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jio Cloud PC:How It Is A ‘Game Changer’

Jio Cloud PC:How It Is A ‘Game Changer’ | ஜியோ கிள்வுட் கணினி.. ரிலையன்ஸின் அடுத்த கேம் சேஞ்சர் திட்டம் பற்றி தெரியுமா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.