சென்னை : நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பிரபல நடிகராக இருந்து வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த தி கிரே மேன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து தி கிரே மேன் 2 படத்திலும் தனுஷிற்கு முக்கிய ரோல் இருப்பதாக படத்தின் டைரக்டர்கள் ருசோ ப்ரதர்ஸ் உறுதி செய்து விட்டனர். தமிழிலும் தனுஷ் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சார் படத்தின் மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் நடத்திய இந்திய ஆண்டு விழாவில் இந்தியா சார்பில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இந்த விழாவில் இந்திய கொடியை ஏந்தியபடி அல்லு அர்ஜுன் நடந்து வந்த போட்டோக்கள் வெளியாகி செம வைரலாகின. இந்த விழாவில் கலந்து கொண்ட நியூயார்க் மேயருக்கு அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் தான் நடித்த ஸ்டையிலை கற்றுக் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அமெரிக்கா சென்ற போது ஹாலிவுட்டின் பெரிய டைரக்டர் ஒருவரை சந்தித்து அல்லு அர்ஜுன் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.அந்த டாப் டைரக்டர் இயக்கும் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுடன் ஹாலிவுட் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ஓகே சொல்லி விட்டாரா என்பதும் தெரியவில்லை.
ஹாலிவுட்டில் மெகா பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அல்லு அர்ஜுன் தனது முடிவை தெரிவிப்பார் என்றும், அதற்கு பிறகு படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது. தனுஷை தொடர்ந்து தெலுங்கு டாப் ஹீரோவும் ஹாலிவுட்டிற்கு செல்வது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்க இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது.
புஷ்பா 2 படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும், வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது என படம் பற்றி பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிலையில், தற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல் ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்துள்ளது.