எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி 40 வயதைக் கடந்தவர்கள் முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ள நிலையில் இன்றும் மாறாமல் அது தொடர்கிறது.
கதாநாயகன், அதுவும் முன்னணி கதாநாயகர்கள் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பட்டியலைப்பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது. இதில் முன்னணியில் இருப்பவர் ரஜினிகாந்த்.
தற்போதுள்ள இளவயது கதாநாயகர்கள் பலரும் முன்னணிக்கு வருவதற்குள் அவர்களுக்கும் 40 வயது கடந்துவிடும் போல இருக்கு.
59 வயதில் கல்லூரி மாணவராக நடித்த எம்ஜிஆர், நம்பியார்
வில்லன் நடிகர் நம்பியார் ஒருமுறை பேட்டி அளித்திருந்தார் அதில் எம்ஜிஆர் இருக்கும்வரை அவருடன் நானும் இளைஞராக நடித்தேன் அவர் கல்லூரி மாணவர் என்றால் நானும் கல்லூரி மாணவர் என பேட்டி அளித்திருந்தார். 1976 ஆம் ஆண்டு நீதிக்கு தலைவணங்கு படம் வெளியானபோது 59 வயதில் கல்லூரி மாணவராக எம்ஜிஆர் நடித்திருப்பார். அவருடன் சக கல்லூரி மாணவராக 57 வயது நம்பியார் நடித்திருப்பார். தற்போது நம் கதாநாயகர்கள் அப்படி நடிப்பதில்லை, ஆனால் 40 வயதை கடந்தும் டூயட் உள்ளிட்டவற்றில் பட்டைய கிளப்புகிறார்கள்.
இன்றைய இளம் நடிகர்கள் பலர் சாதாரண ரோல்களில் நடித்து வருகின்றனர். 80 களில் கதாநாயகனாக அறிமுகமான ரஜினி, கமல் இதுவரை நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் இதுவரை இளம் நாயகனாக நடித்து வருகிறார். இதன் பின்னர் 90 களில் அறிமுகமான சரத்குமார், விஜய், அஜித், விக்ரம், அருண் விஜய் போன்றோரில் விஜய், அஜித், சியான் விக்ரம், அருண் விஜய் உள்ளிட்டோர் இப்பவும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இவர்களில் சத்ய்ராஜ், சரத் குமார் அப்பா வேடம் உள்ளிட்ட வயதுக்கேற்ற வேடங்களுக்கு மாறிவிட்டார்கள்.
1980 களில் ஹீரோவான ரஜினி, கமல் இன்றும் ஹீரோ
80 களில் கதாநாயகனாக அறிமுகமான கமல் மூத்தவர் என்கிற முறையில் 70 களின் பிற்பாதியில் ஹீரோவாக அறிமுகமானவர். அவர் பிறந்த ஆண்டு 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது 68 வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் அவரது வயதுக்கேற்ற ரோலில் ஹீரோவாக நடிக்கிறார். 80 களின் ஆரம்பத்தில் ஹீரோவாக அறிமுகமான ரஜினிகாந்த 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் 72 வது வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார். 80 களின் ஆரம்பத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜயகாந்த் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர் 70 வயது ஆகிறது.
80 களின் பிற்பாதியில் வந்த மோகன், சத்யராஜ், ராமராஜன்
உடல் நலன் காரணமாக 2010 ஆம் ஆண்டுக்கு பின் நடிக்கவில்லை. இதே காலக்கட்டத்தில் அறிமுகமான நடிகர் மோகன் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர் 65 வயது ஆகிறது. 2000 க்குப்பின் நடிக்கவில்லை. 80 களின் இறுதியில் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றிகரமான நடிகராக இருந்த ராமராஜன் 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் 62 வயது ஆகிறது. 2000 ஆம் ஆண்டிலேயே மார்கெட் சரிந்துபோனது. இதேபோல் சத்யராஜ் 1970 களின் இறுதியில் அறிமுகமானவர் 1954 ஆம் ஆண்டு பிறந்தவர், 68 வயது ஆகிறது. தற்போது ஹீரோ வேஷத்தில் நடிப்பதில்லை.
1990 களில் அறிமுகமான விஜய், அஜித், அருண் விஜய், சூர்யா
1990 களில் அறிமுகமானவர்களில் முக்கியமானவர்களில் விஜய், அஜித், விக்ரம் ஆகியோர் 90 களின் முற்பாதியில் அறிமுகமானார்கள் இதில் விஜய் விஜய் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர் 48 வயதாகிறது, அஜித் 1971 ஆம் ஆண்டு பிறந்தவர் தற்போது 51 வயது ஆகிறது, விக்ரம் 1966 ஆம் ஆண்டு பிறந்தவர் 56 வயதாகிறது. அடுத்து 90 களின் பிற்பாதியில் அறிமுகமானவர்கள் சூர்யாவும், அருண் விஜய்யும் ஆவர். அருண் விஜய் 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் தற்போது 45 வயதாகிறது. சூர்யா 1975 ஆம் ஆண்டு பிறந்தவர் 47 வயதாகிறது. இவர்கள் அனைவரும் 40 வயதை கடந்தவர்கள் என்றாலும் இன்றும் டூயட் பாடி ஹீரோவாக நடித்து வருகின்றனர். விக்ரம், அஜித் 50 வயதை கடந்தவர்கள்.
2000 ஆம் ஆண்டில் அறிமுகமான தனுஷ், விஷால், கார்த்தி, விஷ்ணு விஷால், ஜெயம் ரவி
2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 2002 ஆம் ஆண்டு அறிமுகமானவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு, இருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் 1983 ஆம் ஆண்டு பிறந்த இருவருக்கும் 39 வயதாகிறது, தற்போதும் ஹீரோவாக முன்னணியில் உள்ளனர், 2003 ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஜெயம் ரவி இவர் 1980 ஆம் ஆண்டு பிறந்தவர் 42 வயதாகிறது. 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமான விஷாலும், கார்த்தியும் ஒரே வயதினர் 1977 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் தற்போது 45 வயதாகிறது. அடுத்து அறிமுகமான விஷ்ணு விஷால் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர் 38 வயதாகிறது. இவர்கள் அனைவரும் முன்னணி ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். இதில் விஷால், சிம்பு இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
2010 க்குப்பிறகு அறிமுகமான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு அறிமுகமாகி ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், உதயநிதி, அருள்நிதி உள்ளிட்டோரை சொல்லலாம். இதில் சிவகார்த்திகேயன் 1985 ஆ ஆண்டு பிறந்தவர் 37 வயதாகிறது. விஜய் சேதுபதி 1978 ஆம் ஆண்டு பிறந்தவர் 44 வயதாகிறது. விஷ்ணு விஷால் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர். 38 வயதாகிறது. அடுத்து உதயநிதி 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் 45 வயதாகிறது, அடுத்து அருள் நிதி 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் 37 வயதாகிறது.
2020 க்குப்பின் அறிமுகமான ஹீரோ லெஜண்ட் சரவணன்
2020 க்குப்பின் ஹீரோவாக அறிமுகமானவர் என்றால் பெரிய அளவில் யாரும் இல்லை. ஆனால் மாஸ் என் ட்ரி கொடுத்து 2020 க்குப்பின் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி. இவர் பிரம்மாண்டமாக தானே சொந்தப்படம் எடுத்து அறிமுகமானார். இவரது வயது 51 ஆகிறது. ஆனால் இவரை கிண்டலடிப்பவரகள் 50 வயதை நெருங்கியவர்கள் தான் முன்னணி ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.