விசாகப்பட்டினம்: தனது தாயை கிண்டல் செய்த ரவுடியை அடித்துக் கொன்ற இளைஞரை ஆந்திரா போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனு (45). பெயிண்ட்டரான அவர், அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்திருக்கிறார். இவர் தினமும் காலையில் தனது கூட்டாளிகளுடன் அங்குள்ள கடைத்தெருவில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கம். அதேபோல, அங்கு சென்று வருபவர்களை ஆபாசமாக பேசுவதும், சில சமயங்களில் அவர்களை தாக்குவதும் கூட சீனுவின் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
பாலியல் சீண்டல்
இந்த சூழலில், நேற்று அந்தப் பகுதியில் வழக்கம் போல தனது கூட்டாளிகளுடன் சீனு உட்கார்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அங்கு நடந்து சென்ற கவுரி என்ற வீட்டு வேலைகள் செய்து வரும் ஒரு பெண்ணை சீனு பாலியல் ரீதியாக கேலி செய்துள்ளார். இதனால் அந்தப் பெண் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனு, அந்தப் பெண்ணை மிகவும் ஆபாசமான வார்தைகளால் திட்டி இருக்கிறார். இதையடுத்து, அந்தப் பெண் அங்கிருந்து சென்று விட்டார்.
மகனிடம் குமுறல்
இந்நிலையில், வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண் வழக்கத்துக்கு மாறாக மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனை பார்த்த அவரது மகன் பிரசாத், ஏன் இப்படி இருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். முதலில் மழுப்பலாக பதிலளித்த அந்தப் பெண், பின்னர் நடந்த சம்பவத்தை தனது மகனிடம் கூறியுள்ளார்.
பைக்கில் விரைந்த மகன்
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த இளைஞர், தனது தாயை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நேற்று மதியம் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கூட்டாளிகள் யாரும் இல்லாமல் தன்னந்தனியாக சீனு அங்கு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது சீனுவை தனது மகனிடம் அப்பெண் அடையாளம் காட்டினார். அடுத்த நொடியே, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சீனுவை நோக்கி அந்த இளைஞர் ஓடியுள்ளார்.
தாயின் காலடியில் சமர்ப்பணம்
இதனைத் தொடர்ந்து, தனது தாயாரை அழைத்துக் கொண்டு அந்த இளைஞர் அங்கிருந்து சென்றுவிட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சீனுவை அடித்துக் கொலை செய்த இளைஞரை தேடி வருகின்றனர். பாகுபலி திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தை ஆபாசமாக பேசும் காலகேயனுக்கு நிகழ்ந்த கதி, இந்த ரவுடிக்கு நிகழ்ந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள் தெலுங்கு மக்கள்.