தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்டை தான் ஆதரிப்பேன் என கூறும் கம்பீர்
இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர் தேவை என பேட்டி
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்குதான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இத்தொடரில் தனது முதல் போட்டியை இந்திய அணி நேற்று விளையாடிய நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
நேற்று நடந்த போட்டியில் ரிஷப் பண்ட்க்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கவில்லை. பண்ட்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தார்.
BCCI/Twitter
இது குறித்து கம்பீர் கூறுகையில், டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி ஐந்து அல்லது 6 போட்டிகளில்தான் விளையாடுகிறது. இன்னும் நீங்கள் பிளேயிங் லெவனை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறீர்கள்.
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்குதான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது. இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர் தேவை. இந்தியாவில் பல வலது கை வீரர்கள் உள்ளனர்.
நான் தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்டை தான் ஆதரிப்பேன் என கூறியுள்ளார்.