திரையுலகத்துக்கு தண்ணிக்காட்டிய தமிழ் ராக்கர்ஸ்… மூவி பைரஸியில் முதல் தமிழ் சீரிஸ்!

தில்லாலங்கடி பட ஜெயம் ரவிக்கே வேற லெவல் டஃப் கொடுக்கும் தமிழ் ராக்கர்ஸ், திரையுலகத்தினரின் நைட்மேர்! திரையுலகத்தில், உழைக்கும் வர்க்கத்தைக் கழுத்தை நெறிக்கும் சூப்பர் வில்லன். ப்ரோட்யூசர்களின் வயிற்றெரிச்சலையம், சாபத்தையும் ஒட்டுமொத்தமாய் அள்ளிக்கொட்டிக்கொள்ளும் சைத்தான்கள் என்றும் சொல்லலாம். தமிழ் ராக்கர்ஸைக் கொத்தாய் பிடிக்க ஸ்கெட்சு போட்ட துப்பறிவாளன் விஷால்கூட துப்பறிய முடியாமல் கைவிட்ட இந்த தமிழ் ராக்கர்ஸ், உண்மையில் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்கள் எவ்வளவு பெரிய நெட்ஒர்க் என்பது யாருக்கும் தெரியாது. அனானிமஸாக இயங்கும் இவர்கள், அடையாளம் இல்லாமல் எப்படி பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது டாப் சீக்ரெட்!

இப்படி நவீன டெக்னாலஜிகளை வசம் வைத்து கொண்டு, யாரும் தொட முடியாமல் ஆட்டம் காட்டி வரும் தமிழ் ராக்கர்ஸை வைத்தே ‘வெப் சீரிஸ்’ எடுத்து வெளியிட்டிருக்கிறது ஏவிஎம் ப்ரோடக்ஷன்ஸ். அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ். பாஸ்கர் முதலான மிகப் பரிச்சயமான முகங்கள் பலர் நடித்து, SonyLiv ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 19 தேதி வெளியானது.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதைக்களத்தை தொட்டிருக்கிறது “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸ்… திரில்லர் ஸ்டைலில் ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷனாக உருவாகியிருக்கிறது இந்த வெப் சீரிஸ்.

சீரிஸுக்குள்…

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘கருடா’ என்று ஒரு திரைப்படம் வருகிறது. அந்தத் திரைப்படம் வெளியாகவிருக்கும் நாளுக்கு முந்தைய நாளே, அதைத் தன் வெப்சைட்டில் பைரேட் வெர்ஷனாக வெளியிடுவதாக, தமிழ் ராக்கர்ஸ் சவால் விடுகிறது. அதைத் தடுத்து நிறுத்தி, தயாரிப்பாளரைக் கடனில் மூழ்காமல் காப்பாற்ற, களத்தில் இறங்கும் ACP ருத்ரனாக வருகிறார் அருண் விஜய்.

அதற்கு பின், முழு நீள இன்வெஸ்டிகேஷனும், தமிழ் ராக்கர்ஸை பிடித்தார்களா இல்லையா என்பதும்தான் மீதிக் கதை!

தற்போது, SonyLiv ஓடிடி தளத்தில் “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸ், விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ்-ஐ நீங்களும் கண்டுமகிழ, https://bit.ly/3psaUAJ என்கிற லிங்க்கை பயன்படுத்துங்கள். மேலும், முதல் முறை SonyLiv செயலியை பதிவிறக்கம் செய்பவர்கள், கட்டணமின்றி “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸை பார்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.