நடிகை மீரா மிதுன் போலீசுக்கு பயந்து பதுங்கினார்… விரைவில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை…

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் சாம் அபிஷேக் ஆகியோர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை அமைர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது நடிகை மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மீரா மிதுனை விரைவில் கண்டுபிடித்து ஆஜர்படுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

கடந்த 6 ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 16 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் காவல்துறை அளித்துள்ள உத்தரவாதத்தை அடுத்து மீரா மிதுன் மீண்டும் கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.