நொய்டா இரட்டை கோபுர இடிப்புக்கு முன் இடிக்கப்பட்ட நினைவுச்சின்னம் எது தெரியுமா?

நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவில் நினைவுச்சின்னம் ஒன்று இடிக்கப்பட்ட தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 260 அடி உயரமுள்ள நினைவுச்சின்னம் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?

இரட்டை கோபுரங்கள்

இரட்டை கோபுரங்கள்

நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் நேற்று இடிக்கப்பட்டது என்பதும் சட்டத்துக்கு விரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டடத்தின் இடிக்கும் முறையை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர் என்பதும் இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 லாட்வியா நினைவுத்தூண்

லாட்வியா நினைவுத்தூண்

இந்த நிலையில் நொய்டாவில் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்டு 25 ஆம் தேதி லாட்வியா என்ற பகுதியில் உள்ள 260 அடி உயரமான கான்கிரீட் தூண் இடிக்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சோவியத் ஆட்சியின் சின்னங்களில் முக்கியமான ஒன்றாக இருந்த இந்த தூண் இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூண் இடிப்பு
 

தூண் இடிப்பு

ஜெர்மனியின் நாசி அரசுக்கு எதிராக சோவியத் ரஷ்யா போர் தொடுத்து பெற்ற வெற்றியின் நினைவுச்சின்னம் தான் இந்த லாட்வியா தூண். தற்போது சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து தனி நாடாக லாட்வியா இருக்கும் நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து இந்த தூண் இடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

மத்திய ரிகா என்ற பகுதியில் இருந்த 260 அடி உயரமான இந்த தூண் இடிக்கப்பட்டதை அடுத்து இந்த தூண் அருகில் உள்ள குளத்தில் விழுந்தது. இதனால் விக்டரி பூங்காவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தூண் இடிக்கப்பட்ட நிகழ்வை லாட்வியன் ஊடகங்கள் பார்வையாளர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பியது. இந்த தூண் இடிக்கப்பட்டபோது சிலர் லாட்வியா கொடிகளை கையில் வைத்துக்கொண்டு ஆரவாரம் செய்தனர்.

ஐந்து கோபுரங்கள்

ஐந்து கோபுரங்கள்

இந்த தூணின் மேல் மூன்று சோவியத் நட்சத்திரங்களுடன் ஐந்து கோபுரங்களால் ஆனது என்பதும் தாய்நாட்டின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் வகையில் ஒரு பெண் தனது கைகளை உயர்த்திக் கொண்டு இருப்பது போல் இந்த தூண் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம்

ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம்

1985ஆம் ஆண்டு இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது என்பதும், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தபோது கட்டப்பட்ட இந்த தூண், 1991ஆம் ஆண்டு லாட்வியா ரஷ்யாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Another tall structure was razed thousands of km away from Noida 3 days ago!

Another tall structure was razed thousands of km away from Noida 3 days ago! | நொய்டா இரட்டை கோபுர இடிப்புக்கு முன் இடிக்கப்பட்ட நினைவுச்சின்னம் எது தெரியுமா?

Story first published: Monday, August 29, 2022, 7:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.