ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆயிரணக்கான பொதுமக்கள் கூடி கொண்டாட்டம்.
பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆயிரக்கணக்கானோர் கூடி வெற்றி கொண்டாத்தில் ஈடுப்பட்டனர்.
2022ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் A பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்கள் குவித்தது.
Celebrations in pune pic.twitter.com/OjR6LTlS6s
— Uday Shankar (@udayshankar275) August 28, 2022
148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி என்பதால், இந்த போட்டியின் வெற்றி ரசிகர்களுக்கு அதிகமான உற்சாகத்தை வழங்கியுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் நடனமாடி கொண்டாடினர்.
கூடுதல் செய்திகளுக்கு: பாண்டியாவின் பேட்டிங்கில் கதிகலங்கிய பவுளர்கள்…பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இதனைப் போலவே புனே, டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலும் ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்திய அணியின் வெற்றியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | People celebrate in West Bengal’s Siliguri as India beat Pakistan by 5 wickets in #AsiaCup2022 pic.twitter.com/nnaOJVGpdK
— ANI (@ANI) August 28, 2022