சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக காணப்படும் பாரதி கண்ணம்மா தொடர் டிஆர்பியில் சறுக்கியுள்ளது.
ஒரு காலகட்டத்தில் டிஆர்பியில் கலக்கி வந்த இந்தத் தொடர், அரைத்த மாவையே அரைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனாலும் சுதாரித்துக் கொள்ளாத இயக்குநர், தொடர்ந்து சறுக்கல்களையே சந்தித்து வந்தார். தொடர் எப்போது நிறைவடையும் என்ற கமெண்டையும் வாங்கினார்.
பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக காணப்படுகிறது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் ஒரு காலகட்டத்தில் முதலிடத்தில் காணப்பட்டது. டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பெற்றிருந்தது. ஆனால் இந்தத் தொடரின் நாயகி ரோஷினி, தொடரை விட்டு விலகிய நிலையில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ரசிகர்கள் அதிருப்தி
தொடர்ந்து சீரியல் ஒரே மாதிரியான காட்சிகளையே ரசிகர்களுக்கு கொடுத்து வந்தது. ஒரு தம்பதி, சந்தேகம் காரணமாக அவர்களுக்குள் இருக்கும் பிரிவு, அவர்களை பிரிக்க நினைக்கும் வில்லி, அவர்களின் குழந்தைகைள் இந்தக் கதைகளத்திலேயே தொடர்ந்து இந்தத் தொடர் பயணித்து வருகிறது.
அடுத்தடுத்த ட்விஸ்ட்
இந்நிலையில், நாயகி கண்ணம்மாவை, அவரது கணவரின் மருத்துவமனையில் வேலைக்கு சேர வைத்தது, பாரதியின் அப்பாவிற்கு கேன்சர், வில்லி வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க முயலும் சவுந்தர்யா என அடுத்தடுத்த ட்விஸ்ட்களை கடந்த சில வாரங்களில் இந்த தொடர் கொடுத்து வந்தது.
தீவிரவாதிகள் பிடியில் பாரதி மருத்துவமனை
இதனால் ரசிகர்கள் இம்ப்ரஸ் ஆனார்கள். இந்நிலையில் தற்போது பாரதியின் மருத்துவமனை தீவிரவாதிகளின் கையில் சிக்குவதாகவும் கண்ணம்மா, லக்ஷ்மியும் அவர்கள் பிடியில் மாட்டிக் கொள்வதாகவும் தற்போது புதிய காட்சிகளை கொடுக்கவுள்ளது பாரதி கண்ணம்மா தொடர்.
பாரதி போராட்டம்
இவர்களை மீட்க பாரதி போராடுவதாகவும் கதை நகர்கிறது. இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தின் காட்சிகளை இந்தத் தொடர் தற்போது கையிலெடுத்துள்ளது. இதையடுத்து தங்களது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீவிரவாதிகளின் கையில் சிக்கியுள்ளதாக சவுந்தர்யா கதறுகிறார். இவ்வாறு புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. இதன் காட்சிகளை அடுத்துவரும் நாட்களில் காணலாம்.
வரைமுறை வேண்டாமா?
என்னதான் சீரியல் என்றாலும் ஒரு வரைமுறை வேண்டாமா என்று கேட்க வைத்துள்ளது இந்த ப்ரமோ. விஜயின் மாஸ் படமாக வெளியான பீஸ்ட் படத்தின் இந்தக் காட்சிகளையே ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் தற்போது இதையே தைரியமாக எடுத்துள்ளார் இயக்குநர். ஏங்க கதை எதுவும் கிடைக்கலைன்னா சீரியலை இழுத்து மூட வேண்டியது தானே என்று ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் ட்ரோல்
தொடரில் லஷ்மி அழுவதைகூட தற்போது ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தீவிரவாதியாக வருபவர் அரசாங்கத்திற்கு மூன்று கோரிக்கையை வைத்துள்ளார். அது நடக்கவில்லை என்றால் எல்லாரையும் சாகடித்து விடுவாராம். அடேய் என்றும் வேணாம் அழுதுடுவேன் என்றும் தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்வதை பார்க்கும்போது இந்த சீரியலை முடித்து வைத்தால் தான் என்ன என்றே அனைவரும் யோசித்து வருகின்றனர்.