புதுச்சேரியில் 90 முதல் 100 வயதுள்ள முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் 90 முதல் 100 வயது உள்ள முதியவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், 100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியிலும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அப்போது தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.