பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கல்…ஆட்டநாயகன் ஹர்திக் பாண்டியா: வீடியோ காட்சி



17 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் ஹர்திக் பாண்டியா.

நான்கு ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்களையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா அதிரடியால் இறுதி நேரத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

துபாய் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

முதல் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து 20 ஓவர்களில் 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி துரத்த, ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற செய்துள்ளார்.

போட்டியில் சூர்யகுமார் யாதவ்-வின் விக்கெட் பறிபோனதை தொடர்ந்து, 14.3வது ஓவரில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.

அதிலும் ஆட்டத்தின் இக்கட்டான இறுதி கட்டத்தில் 12 பந்துகளுக்கு 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா 19 வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பினார்.

மேலும் பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ்
வீசிய கடைசி 20வது ஓவரின் நான்காவது பந்தில் மற்றொரு சிக்ஸரை விளாசி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்காக 4 ஓவர்களை பந்துவீசி அபாரமாக 3 வீக்கெட்களையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: பாண்டியாவின் பேட்டிங்கில் கதிகலங்கிய பவுளர்கள்…பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்தநிலையில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமை போற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் மீம்ஸ்களையும், பாராட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.