ஜேர்மன் நகரம் ஒன்றில் நபர் ஒருவரை பொலிசார் முரட்டுத்தனமாக கைது செய்துள்ளனர்.
அவர் தாக்கப்பட்டதைக் காட்டும் வீடியோவையும் பொலிசார் அழித்துள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
ஜேர்மனியில் கைது முயற்சியின்போது பொலிசார் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜேர்மனியிலுள்ள Oer-Erkenschwick என்னும் நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏதோ பிரச்சினை என்று கூறி, அங்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பாக அந்த வீட்டிலுள்ள ஒருவரைக் கைது செய்ய முயன்றுள்ளனர் பொலிசார். ஆனால், அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மீது பெப்பெர் ஸ்பிரே பிரயோகம் செய்து முரட்டுத்தனமாக அவரை பொலிசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த 39 நபர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், பொலிசார் தாக்கியதை ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளனர். உடனே அவரது மொபைல் போனைப் பிடுங்கிய பொலிசார், அந்த வீடியோவை அழித்துள்ளனர்.
இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், 8 பொலிசார் மீது அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளார்கள்.
அழிக்கப்பட்ட வீடியோவை மீட்கும் பணி துவங்கியுள்ளதுடன், வேறு யாராவது அந்த சம்பவத்தை வீடியோ எடுத்திருந்தால் அதை தங்களிடம் கையளிக்குமாறு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.