மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த பாவனா
நடிகை பாவனா தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார். பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். கன்னட படங்களில் நடித்து வந்தவர் தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்கத் துவங்கியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆடம் ஜோன் என்ற படத்தில் தான் பாவனா கடைசியாக நடித்திருந்தார். தற்போது ஷராபுதீன் நடிக்கும் எண்டிக்கக்கொரு பிரேமொண்டர்ன் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.