மின் கட்டண அதிகரிப்பு: சபை ஒத்திவைப்பு  விவாதம் இன்று

பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30ற்குக் கூடவுள்ளது.

இன்றைய சபை அமர்வின் போது மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள  சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று முற்பகல் 9.30ல் இருந்து பிற்பகல் 4.30 வரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(30) பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.

நாளை (30) பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடும். ஒரு மணியில் இருந்து 2 மணி வரை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார்.

இதனைத்தொடர்ந்து,  பாராளுமன்றம் நாளை மறுதினம் 9.30 வரை ஒத்திவைக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.